Aximdaily
Tether USDT

Tether USDT என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது?

aximtrade broker

Tether (USDT) என்பது 2014’ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு வகை கிரிப்டோகரன்சி (cryptocurrency) ஆகும். இதுவே அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட முதல் கிரிப்டோகரன்சி ஆகும். Realcoin என முன்பு அறியப்பட்ட Tether, 2021’ஆம் ஆண்டில் அதிக வர்த்தகம் செய்யப்பட்ட முதல் பத்து கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாக இருந்தது. இதன் மொத்த சந்தை மதிப்பு $68 பில்லியன் மற்றும் ஒரு ஒற்றை Tether’இன் மதிப்பு $1 ஆகும்.

Tether’இன் மதிப்பு மற்ற கிரிப்டோகரன்சிகளை விட மிகவும் சீரானது. இதன் காரணமாகவெ, மற்ற கிரிப்டோகரன்சிகளின் தீவிர ஏற்ற இறக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்கும் முதலீட்டாளர்களால் Tether மிகவும் விரும்பப்படுகிறது. மற்ற கிரிப்டோகரன்ஸிகளைப் போலல்லாமல், Tether ஒரு StableCoin ஆகும், மற்றும் அமெரிக்க டாலர்கள் போன்ற Fiat கரன்சிகளால் இது ஆதரிக்கப்படுகிறது. இது டாலருடன் சமநிலையை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் Tether பெரும்பாலும் டிஜிட்டல் டாலர் என்று அழைக்கப்படுகிறது.

USDT என்றால் என்ன?

USDT என அறியப்படும் Tether என்பது, Fiat கரன்சிகளின் டிஜிட்டல் பயன்பாட்டை எளிதாக்க பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கிரிப்டோகரன்சி ஆகும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் Fiat கரன்சிளை பயன்படுத்த, மற்ற டிஜிட்டல் நாணயங்களைக் காட்டிலும், வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் நிலையான வழியை USDT வழங்குகிறது.

கிரிப்டோகரன்சிகளின் கட்டுப்பாடற்ற தன்மையை அமெரிக்க டாலர் போன்ற Fiat கரன்சிகளின் மதிப்பு நிலைத்தன்மையுடன் இணைக்கும் நோக்கில் USDT வடிவமைக்கப்பட்டது.

கிரிப்டோ சந்தையில், டாலர்’இன் மதிப்பைக் கொண்ட முதல் StableCoin என்ற பெருமை USDTக்கு உண்டு. எவரும் அமெரிக்க டாலர்களை டிஜிட்டல் வடிவில் எளிதாக சேமிக்கவும், பெறவும் மற்றும் அனுப்பவும் Tether உருவாக்கப்பட்டது.

Stablecoin என்றால் என்ன?

Stablecoin (ஸ்டேபிள்காயின்) என்பது ஒரு கிரிப்டோகரன்சி ஆகும், இதன் மதிப்பு Fiat கரன்சி அல்லது தங்கம் போன்ற பிற சொத்துகளுடன் தொடர்புடையது. Bitcoin மற்றும் Ethereum போன்ற கிரிப்டோகரன்சிகளின் காணப்படும் வழக்கமான ஏற்ற இறக்கங்களுடன் ஒப்பிடும்போது, Stablecoin விலைகளை நிலையானதாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணங்கள் காரணமாக Stablecoin’கள் பெரும்பாலும் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் இருந்து வெளியேறும்போது, லாபம் அல்லது மூலதனத்தை (capital’ஐ) மாற்ற விரும்பினால், Stablecoin’களை மதிப்பு சேமிப்பகமாகவும் பயன்படுத்தப்படலாம். ஏனெனில் Stablecoin’கள் விரைவான பரிவர்த்தனை நேரத்தை வழங்குகின்றன.

Tether எப்படி வேலை செய்கிறது?

USDT
USDT

Tether கிரிப்டோகரன்சி, புதிய கிரிப்டோகரன்சிகளை வழங்க அனுமதிக்கும் ஆம்னி நெறிமுறையைப் பயன்படுத்தி பிட்காயின் பிளாக்செயினில் வெளியிடப்பட்டது. பிட்காயின் பிளாக்செயினில் வெளியிடப்பட்டதால், நெட்வொர்க்கின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பின் அம்சங்களை, Tether கிரிப்டோகரன்சி பெற்றுள்ளது.

Tether கிரிப்டோகரன்சி; Bitcoin, Ethereum (ERC20), Tron, EOS, Algorand, SLP மற்றும் OMG பிளாக்செயின்கள் உட்பட பல பிளாக்செயின்களில் செயல்படுகிறது, மேலும் அவற்றின் வழிமுறைகளால் பாதுகாக்கப்படுகிறது.

Tether கிரிப்டோகரன்சி, Fiat பண இருப்புகளால் 100% ஆதரிக்கப்படுகிறது. மற்றும் ஒவ்வொரு USDT’க்கும் $1 சமநிலை அளவை உறுதி செய்கிறது. அதாவது 1 USDT என்பது 1 USDக்கு சமம் ஆகும். எனவே, கிட்டத்தட்ட $68 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன், Tether Limited 68 பில்லியன் டாலர் இருப்புக்களை வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த Fiat கரன்சிகள் USDT’யை ஆதரிக்கிறது?

Tether மூன்று Fiat கரன்சிகளை ஆதரிக்கிறது:

  • (USD) அமெரிக்க டாலர்கள் – USDT
  • (EUR) யூரோ – EURT
  • (CNH) ஆஃப்ஷோர் சீன யுவான் – CNHT

Check Forex vs Crypto Trading: What Is Your Best Choice?

Tether USDT எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

கிரிப்டோ சந்தைகளில் Tether ஒரு முக்கிய நாணயமாக மாறியுள்ளது. டிரேடர்கள் இப்போது டிஜிட்டல் டாலரிலிருந்து கிரிப்டோவிற்கும், அதற்கு நேர்மாறாகவும் நிதியை தடையின்றி மாற்றலாம். இந்த குறிப்பிட்ட அம்சத்தின் காரணமாக, பல வர்த்தகர்கள் USDT’யை ஈடுசெய்ய முடியாத சொத்தாகக் கருதுகின்றனர். Tether USD, பொதுவாக நிதி மற்றும் பணம் செலுத்தும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கிரிப்டோ வர்த்தகம் செய்ய Fiat கரன்சிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாரம்பரிய வங்கிச் சேவைகளை விட USDT மிகவும் திறமையான, வேகமான மற்றும் மலிவான கட்டண நுழைவாயிலை வழங்குகிறது. தற்போது, USDT’க்கு பணத்தை மாற்றுவது நம்பகமான நிதி தீர்வாகும், குறிப்பாக கிரிப்டோ வர்த்தகத்திற்கு.

AximTrade அதன் வர்த்தகர்கள் USDT’யைப் பயன்படுத்தி தங்கள் வர்த்தகக் கணக்கிலிருந்து டெபாசிட் செய்யவும் மற்றும் திரும்பப் பெறவும் அனுமதிக்கிறது.

யார் Tether’ஐ பயன்படுத்தலாம்?

பணம் செலுத்த, சேமிக்க, பரிமாறிக்கொள்ள அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக USDT’யை எவரும் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், Tether’ன் முக்கிய பயனர்கள் கிரிப்டோகரன்சி வர்த்தகர்களாக உள்ளனர், ஏனெனில் Tether மற்ற கிரிப்டோகரன்சிகளின் தொடர் விலை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராகவும் மதிப்பை சேமிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கிரிப்டோ பரிமாற்றங்களும் பாரம்பரிய வங்கிகளின் பரிவர்த்தனைகளுக்குப் பதிலாக USDT’யை ஒரு கட்டண முறையாக ஏற்றுக்கொள்கின்றன.

Tether (USDT’யை) எங்கே வாங்குவது?

வெவ்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்ய Tether’ரைப் பயன்படுத்தலாம். உண்மையில், USDT’இன் சராசரி தினசரி வர்த்தக அளவு Bitcoin’ஐ விட அதிகமாக உள்ளது. இதுவே உலகின் தலைசிறந்த கிரிப்டோகரன்சி ஆகும். இது அமெரிக்க டாலர்களுக்கு டிஜிட்டல் மாற்றீட்டை வழங்குகிறது, மற்றும் பரிவர்த்தனைகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைகிறது.

Tether’ஐ எப்படி வாங்குவது?

மற்ற கிரிப்டோகரன்சிகளைப் போலவே, USDT’யை டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியும், எந்த கிரிப்டோ பரிமாற்றம் மூலமாகவும், அல்லது வங்கிப் பரிமாற்றங்கள் மூலம் எளிதாக வாங்கலாம். Tether’ஐ எளிதாக வாங்க, பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

  1. கிரிப்டோகரன்சி பரிமாற்றத்துடன் கணக்கைத் திறக்கவும்: முதலில், கணக்கைப் பதிவு செய்ய உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி ஒரு கணக்கைத் திறக்க வேண்டும்.
  2. நிதியளித்து வாங்கவும்: உங்கள் கணக்கில் Tether’ஐ வாங்க நீங்கள் பயன்படுத்தும் Fiat பணத்தில் உங்கள் கணக்கிற்கு நிதி செலுத்த வேண்டும்.
  3. வர்த்தகம் மற்றும் பணம் செலுத்துதல்: இப்போது நீங்கள் வர்த்தகம் அல்லது கட்டண நோக்கங்களுக்காக உங்கள் கணக்கில் USDT’ஐப் பயன்படுத்தலாம்.

மாற்றாக, நீங்கள் Tether Limited இணையதளத்தில் கணக்கை உருவாக்கி நேரடியாக USD’யை வாங்கலாம்.

USDT என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரிப்டோகரன்சி ஆகும், இது கிட்டத்தட்ட ஒவ்வொரு கிரிப்டோ பரிமாற்றத்திலும் காணப்படுகிறது. உஙகளால், Fiat கரன்சி மற்றும் கிரிப்டோவையும் பயன்படுத்தி ஒரு டெதரையும் வாங்கமுடியும்.

USDT மற்றும் USDC இடையே உள்ள வேறுபாடு என்ன?

USDT Vs USDC
USDC

USDC என்பது USD Coin எனப்படும் மற்றொரு பிரபலமான stablecoin’ஐக் குறிக்கிறது, இது டாலரை குறியாக்கம் செய்து பரிவர்த்தனைகளை மலிவாகவும் வேகமாகவும் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. Tether’ஐ போலவே, USD நாணயமும் அமெரிக்க டாலர்களால் ஆதரிக்கப்பட்ட ஒரு நிலையான நாணயமாகும்.

இது மற்ற கிரிப்டோகரன்சிகளுடன் ஒப்பிடும்போது நாணயத்தை மிகவும் நிலையானதாக ஆக்குகிறது. இதேபோல், USD நாணயம் அமெரிக்க டாலருக்கு இணையாக இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 1 USDC என்பது $1க்கு சமம். USD நாணயம் ஒரு டிஜிட்டல் டாலராக சந்தைப்படுத்தப்படுகிறது மற்றும் பல பொது பிளாக்செயின்களில் சர்வதேச பணம் செலுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. Tether மற்றும் USD நாணயங்கள் மிகவும் வர்த்தகம் செய்யப்படும் நிலையான நாணயங்களில் ஒன்றாகும்.

USDC வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டாலும், USDT’யே அதிக வர்த்தக அளவு மற்றும் பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளது, மற்றும் இது crypto-stablecoin பரிமாற்றங்களை எளிதாக்குகிறது.


AximTrade உடன் உடனடி Deposit மற்றும் Withdrawl’களை அனுபவிக்கவும்

AximTrade உடனடி Deposit’கள் மற்றும் E-Wallet’களுக்கு Withdrawl’களை வழங்குகிறது, இது வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிகளின் முழு கட்டுப்பாட்டையும் வைத்திருக்க அனுமதிக்கிறது. பரந்த அளவிலான உள்ளூர் மற்றும் சர்வதேச கட்டண முறைகளுடன், AximTrade பணத்தை திரும்பப் பெற அல்லது டெபாசிட் செய்ய வசதியான வழிகளை வழங்குகிறது மற்றும் வர்த்தகர்களுக்கு நம்பகமான நிபந்தனைகளை செயல்படுத்துகிறது.

அனைத்து AximTrade பரிவர்த்தனைகளும் தனிப்பட்ட கணக்கு மூலம் கண்காணிக்கப்படும். மேலும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் நிதியை தெளிவாகவும் முழுமையாகவும் பிரிப்பதை உறுதி செய்வதற்காக தனிப்பட்ட கணக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தகக் கணக்கிற்கான வைப்புத்தொகையானது வாடிக்கையாளர்களின் நிதிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் குறிப்பிட்ட கணக்குகளுக்கு அனுப்பப்படும். கணக்குகளுக்கு இடையிலான உள் பரிமாற்றங்கள் உடனடியாக செயல்படுத்த மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிகளை 24/7 நேரமும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


இன்ரே AximTrade’இல் சேர்ந்து 49+ நிதிக் கருவிகள் உதவியுடன் உங்கள் வர்த்தகத்தைத் தொடங்குங்கள்

AximTrade என்பது, ஒரு உயர்மட்ட தொழில்நுட்பம் மற்றும் மிகவும் மேம்பட்ட MT4 ஆர்டர் செயல்படுத்துதலுடன் நிதிச் சந்தைகளில் வேகமாக வளர்ந்து வரும் விருது பெற்ற தரகு சேவை வழங்குநராகும். AmimTrade போட்டித் திறன் நிலைமைகள், மிகக் குறைந்த பரவல்கள் மற்றும் கணக்கு வகைகள் மற்றும் முதலீட்டு மூலதனங்களின் பன்முகத்தன்மையை வழங்குகிறது. வர்த்தக நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் விதிமுறைகள் பற்றி மேலும் அறிய முழு AximTrade மதிப்பாய்வைப் பார்க்கவும்.

AximTrade அந்நிய செலாவணி வர்த்தகர்களுக்கு பயன்படுத்த எளிதான தொழில்நுட்பம், கல்வி வளங்கள், தொழில்நுட்ப பகுப்பாய்வு, அந்நிய செலாவணி போனஸ் விளம்பரங்களின் வகைகள் மற்றும் சிறந்த வர்த்தக நிலைமைகளுடன் அதிக போட்டித்தன்மை கொண்ட வர்த்தக சூழலை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


aximtrade broker