Aximdaily
நகல் வர்த்தகம்

Copy Trading (நகல் வர்த்தகம்) செய்வது எப்படி

aximtrade broker

Copy Trading (நகல் வர்த்தகம்) என்பது பொதுவாக புதியவர்கள் மற்றும் அனுபவமற்ற Forex  வர்த்தகர்களால் வர்த்தக முடிவுகளை சிரமமின்றி எடுக்கப் பயன்படுத்தப்படும் பிரபலமான வர்த்தக உத்தியாகும். இது ஒரு நிபுணரின் வர்த்தக நடவடிக்கையை பின்பற்றும் செயல்முறையாகும்.  

Contents hide

வெற்றிகரமான மற்றும் நிபுணத்துவ வர்த்தகர்களின் வர்த்தகத்தை நகலெடுக்கும் நடைமுறை பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது, ஏனெனில் இது குறைந்த வர்த்தக அனுபவமுள்ள புதிய நபர்களை கூட அதிக பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. சிறந்த நகல் வர்த்தக தளத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் முதலீட்டு நோக்கங்களை நிறுவுவதற்கும் அபாயங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு அடிப்படைக் காரணியாகும். 

Copy Trading (நகல் வர்த்தகம்) என்றால் என்ன?

நகல் வர்த்தகம் என்பது ஒரு தொழில்முறை வர்த்தகரின் நிலைகளை மற்றொரு வர்த்தகரின் கணக்கு மூலம் நகலெடுப்பதாகும். இது தானாகவோ அல்லது கைமுறையாகவோ செய்யலாம். இந்த வர்த்தக நுட்பம் நீங்கள் பின்பற்ற விரும்பும் மற்ற முதலீட்டாளர்களின் சாதனைப் பதிவைப் பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வர்த்தகர் வெற்றிகரமான வர்த்தகர்களின் உத்திகளைக் கண்காணிக்கவும் கற்றுக்கொள்ளவும் அனுமதிக்கிறது.  

ஆனால், எந்த வர்த்தக முறையைப் போலவே, உண்மையான பணத்தை பணயம் வைக்கும் முன் வர்த்தகரின் பதிவை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அனுபவம் வாய்ந்த வர்த்தகரின் உத்திகளைப் பின்பற்றினால் கூட, பணத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

சந்தையைத் தொடர நேரம் இல்லாத அல்லது சொந்தமாக வர்த்தகம் செய்வதற்கான அனுபவம் இல்லாத வர்த்தகர்களுக்கு நகல் வர்த்தகம் மிகவும் பொருத்தமானது. இது குறுகிய கால வர்த்தகம், நாள் வர்த்தகம் மற்றும் ஸ்விங் டிரேடிங் போன்றவற்றில் சிறந்தது. இந்த அணுகுமுறை பொதுவாக Forex, (Cryptocurrency) கிரிப்டோகரன்சிகள், (stocks) பங்குகள் மற்றும் பிற (volatile) நிலையற்ற சந்தைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

நகல் வர்த்தகம் செய்யும் போது கடந்தகால முடிவுகள் எதிர்கால முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். 

நகல் வர்த்தகம்
copy trade

Forex சந்தையில் CopyTrade எவ்வாறு செயல்படுகிறது?

Copy Trading (நகல் வர்த்தக) உத்தி Forex வர்த்தகர்களிடையே மிக பிரபலமானது. சுயமாக ஆராய்ச்சி செய்து பகுப்பாய்வு செய்வதற்குப் பதிலாக, Forex வர்த்தகர்கள் மற்றொரு வர்த்தகரின் நிலைகளை வெறுமனே நகலெடுக்க இது உதவுகிறது. நகல் வர்த்தகம் வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக உத்திகளை தானியக்கமாக்க அனுமதிக்கிறது. அபாயங்கள் மற்றும் வெகுமதிகளை அறிவதன் மூலம், இது ஒரு நல்ல உத்தியா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியும். 

ஒரு வர்த்தகரின் நிலையை நகலெடுப்பதற்கு முன், அவரது வர்த்தக வரலாற்றைச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். அதேபோல, உங்கள் உத்திகள் மற்றும் திட்டங்களோடு ஒத்துப்போகும் வர்த்தகரைத் தேர்ந்தெடுப்பதும் அவசியமாகும். நீங்கள் சொந்தமாக ஒரு வர்த்தகரை நகலெடுக்கலாம் அல்லது அவர்களின் நிபுணத்துவ வர்த்தகரை நகலெடுக்க அனுமதிக்கும் தரகரைத் தேர்வு செய்யலாம். 

மற்றொரு முதலீட்டாளருடன் வர்த்தகத்தை நகலெடுக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று, (Entry) நுழைவு, (Stop loss) நிறுத்த இழப்பு மற்றும் லாப நிலைகள் உட்பட வர்த்தகத்தை முழுவதுமாக நகலெடுப்பது. மற்றொன்று, உங்கள் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் இடர் விகிதத்தின் அடிப்படையில் வர்த்தகத்தை நகலெடுப்பதாகும். 

Copy Trading (நகல் வர்த்தகம்) வர்த்தகர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோக்களை பல்வகைப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. நகல் வர்த்தகத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல நிலைகள் வர்த்தகம் செய்யலாம். 

உங்கள் போர்ட்ஃபோலியோவை மேலும் பல்வகைப்படுத்துவதற்கான ஒரு வழி, வெவ்வேறு நிதிக் கருவிகளைப் பயன்படுத்தி பல்வேறு வர்த்தகர்களை நகலெடுப்பதாகும். வர்த்தகர்கள் பல்வேறு வர்த்தக உத்திகளை ஆராயவும் இது உதவுகிறது.


Copy Trading (நகல் வர்த்தகத்தின்) நிலைகள் 

  1. பண மேலாளர் – வழங்குபவர்: வர்த்தக செயல்பாடுகளுக்காக நகலெடுக்கப்படும் ஒரு வர்த்தக நிபுணர். சமிக்ஞை வழங்குநர் (signal provider) என்றும் அழைக்கப்படுவர். 
  1. பின்தொடர்பவர் – நகலெடுப்பவர்: மற்றொரு முதலீட்டாளரின் வர்த்தகத்தைப் பின்தொடர்ந்து நகலெடுக்கும் வர்த்தகர். பெரும்பாலும் சந்தாதாரர் என்று குறிப்பிடப்படுவர். 

Copy Trading (நகல் வர்த்தக) தளங்கள்

நகல் வர்த்தகத்தை முதன்மையான Forex தரகர்கள் அனைவரும் வழங்குகின்றனர். MetaTrader 4 போன்ற தனிப்பயனாக்கப்பட்ட வர்த்தக தளங்கள் சந்தையில் மிகவும் பிரபலமானதாகும். நகல் வர்த்தகத்திற்கு MT4’ஐப் பயன்படுத்தும் தளங்கள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன.  

பெரும்பாலான Forex வர்த்தகர்கள் MT4 தளத்தை விரும்புவதால், பண மேலாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு நகல் வர்த்தகத்தைத் தொடங்க இது சிறந்த தளமாகத் தெரிகிறது. Forex தரகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தீர்வுகளை நகலெடுக்கவும், சுயவிவரங்களை உருவாக்கவும் மற்றும் பண மேலாளர்களாகவும் வாய்ப்பளிக்கின்றனர். AximTrade இல், Forex கணக்கைத் திறக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நகல் வர்த்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. 

நகல் வர்த்தகம்

நகல் வர்த்தகத்தை சேயல்படுத்த சிறந்த வர்த்தகரை எவ்வாறு தேர்வு செய்வது?

நகல் வர்த்தகத்திற்கு நீங்கள் நகலெடுக்க விரும்பும் வர்த்தகர்களை ஆராய வேண்டும். நகலெடுக்கத் தொடங்க விரும்பும் எவருக்கும் இது ஒரு முக்கியமான படியாகும். நகல் வர்த்தக தளங்களின் வழியாக, நீங்கள், சிறந்த செயல்திறன், புகழ், அதிக லாபம், குறைந்தபட்ச ஆபத்து மற்றும் அனுபவம்  கொண்ட மேலாளர்களை கண்டறியலாம். ஒவ்வொரு பண மேலாளர் சுயவிவரமும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, வளர்ச்சி, தினசரி ஆதாயம், குறைந்தபட்ச முதலீடு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மதிப்பிடுகளை நீங்கள் காணமுடியும். 

இந்த செயல்திறன் மதிப்பு மற்றும் விளக்கப்படங்கள் வர்த்தகர்கள் தங்கள் முதலீடுகளுக்கு சரியான பண மேலாளர் யார் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், நகல் வர்த்தகத்தில் பண மேலாளரை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை அறிய, இந்த செயல்முறைக்கு சரியான மதிப்பீடு தேவைப்படுகிறது. உங்களுக்கான சிறந்த வர்த்தகரைத் தேர்ந்தெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் இங்கே:

நகல் வர்த்தகம்

1. பண மேலாளரை நகலெடுக்க சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்காமல், காலப்போக்கில் செயல்திறனைக் கண்காணிக்க வேண்டும். மற்றொரு முக்கியமான உதவிக்குறிப்பு என்னவென்றால், பண மேலாளர்கள் தங்கள் சம்பாதிக்கும் உச்சத்தை அடைந்த பிறகு நகலெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில், திறந்த நிலைகள் ஏற்கனவே முழு திறனை அடைந்துவிட்டதை இது குறிக்கலாம்.  

பண மேலாளர்கள் வர்த்தகம் செய்யும் புதிய நிலைகளைத் திறக்கும்போது அவர்களின் வர்த்தகங்களை நகலெடுக்கத் தொடங்குவது நல்லது. 

2. உங்கள் முதலீட்டுக்கு ஏற்ற அபாய அளவைக் கண்டறியவும் 

முதலீடு என்று வரும்போது அபாய அளவை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. எனவே, பண மேலாளரின் வர்த்தகத்தை நகலெடுக்கும் முன் அவர்களின் இடர் அளவை எவ்வாறு மதிப்பிடுவது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். பண மேலாளர் அபாயகரமான உத்தியைப் பயன்படுத்துகிறாரா இல்லையா என்பதை ஆபத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் தீர்மானிக்கலாம். அதைக் கருத்தில் கொண்டு, உங்கள் முதலீட்டுக்கு எது பொருத்தமானது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். 

சமநிலை மற்றும் ஆபத்து/வெகுமதி விகிதம் மதிப்பீடு செய்ய வேண்டிய மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உங்கள் முதலீட்டு மூலதனத்துடன் பொருந்தக்கூடிய சரியான மேலாளரை மட்டுமே தேர்வு செய்யுங்கள். புகழ் அல்லது வளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே பின்தொடர்வதைத் தவிர்க்கவும். பண மேலாளரின் இந்த உத்தி தங்களுக்குப் பொருந்துகிறதா இல்லையா என்பதைப் சரிபார்பது நீங்கள் உங்களின் பணத்தை இழப்பில் இருந்து பாதுகாக்கும். 

3. சரியான அளவீடுகளைத் தேடுங்கள் 

முந்தைய வர்த்தக நிலைகளில் கிட்டத்தட்ட எந்த இழப்பும் இல்லாமல் சரியான பதிவுகளைக் கொண்ட சில பண மேலாளர்கள் உள்ளனர். அந்த பண மேலாளர்களில் சிலரைப் பற்றி நீங்கள் சந்தேகிக்க வேண்டும், ஏனென்றால் எல்லா நிலைகளும் எல்லா நேரத்திலும் லாபகரமானவை என்பது யதார்த்தமானது அல்ல. மிகவும் வெற்றிகரமான அந்நிய செலாவணி வர்த்தகர்கள் எப்போதும் இழப்புகளைப் பெறலாம். எனவே, நிலைத்தன்மையை முதல் விசையாகப் பார்ப்பது நல்லது.  

நகல் வர்த்தகத்தில் பண மேலாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நிலையான உத்தியைக் கொண்டவர்களை பின்பற்றவும், அவர்களுக்கு பெரிய வருவாய் அல்லது பெரிய இழப்புகள் இருக்காது. உச்சநிலை ஒரு நல்ல அறிகுறி அல்ல. 

4. உங்கள் நிலைகளைக் கண்காணிக்கவும் 

நகல் வர்த்தகம் என்பது உங்கள் வர்த்தகத்தில் கலந்து கொள்ள மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல. மிகவும் வெற்றிகரமான பண மேலாளரைப் பின்பற்றினாலும், நீங்கள், உங்கள் திறந்த நிலைகளைக் கண்காணிப்பது முக்கியம். குறுகிய காலத்தில் பல நிலைகளைத் திறப்பது ஆபத்தானது மற்றும் அது பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும். வர்த்தகத்தின் போது நீங்கள் பின்பற்றும் அதே கவனத்துடன் நகலெடுப்பதை நிர்வகிக்கவும். செயல்பாட்டின் போது உங்கள் கணக்கு சமபங்கு மற்றும் இருப்பைக் உறுதிசெய்து, அதர்கேற்ப உங்கள் நிலைகளைப் நிலைநிறுத்தவும். 


Copy Trading (நகல் வர்த்தக) உத்திகள் 

நீங்கள் நகலெடுக்க விரும்பும் மேலாளரின் வர்த்தக செயல்முறை உங்கள் சொந்த வர்த்தக உத்தியுடன் எவ்வாறு சீரமைக்கப்படுகிறது என்பதை மதிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. செயல்முறையை மதிப்பிடுவதற்கான சில குறிப்புகள் இங்கே:

  • வளைந்து கொடுக்கும் தன்மை: முழு தானியங்கு நகல் வர்த்தக அமைப்புகள், செயல்படுத்தப்பட்ட வர்த்தகத்தின் மீது குறைந்தபட்ச கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்கும். உங்கள் வர்த்தகத்தை நீங்கள் க்கைக்குள் வைத்திருக்க விரும்பினால், நீங்கள் நெகிழ்வான பாணியைத் தேர்வு செய்வது நல்லது. 
  • குறைந்த leverage’ல் வர்த்தகம்: குறைந்த leverage’ல் சேய்யும் வர்த்தகம் சிறிய மூலதனத்துடன் உங்கள் நிலை அளவுகளை அதிகரிக்க அனுமதிக்கிறது. 
  • ஆபத்து அளவு: இது ஒரு வர்த்தகரிடம் இருந்து மற்றொருவருக்கு மாறுபடும். உங்களால் முடிந்ததை மட்டுமே நீங்கள் பணயம் வைக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பண மேலாளரின் விகிதமானது, நீங்கள் ரிஸ்க் செய்யக் கூடியதை விட அதிகமாக இருந்தால், உங்கள் ஆபத்து அளவைச் சரிசெய்யவும் 
  • சந்தை அறிவு பெறுங்கள்: Forex, (Stocks) பங்குகள், (Indices) குறியீடுகள், (Commodities) பொருட்கள் அல்லது கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ய விரும்பினால், அந்த சந்தையின் நன்மை தீமைகளை அறிவது முக்கியம் 
  • தீர ஆராயுங்கள்: மற்ற வர்த்தகர்களை நகலெடுப்பது, நீங்கள் சொந்தமாக சில ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று அர்த்தமல்ல. தீர ஆராய்வது உங்கள் சிறந்த வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காணவும், உங்கள் சொந்த முன்னோக்கின் அடிப்படையில் வர்த்தகங்களை நிராகரிப்பதற்கான விருப்பத்தையும் கண்டறிய உதவுகிறது.

நகல் வர்த்தகத்தின் முக்கிய நன்மைகள் 

நகல் வர்த்தகத்தைப் பயன்படுத்துபவர்களின் வெற்றி விகிதத்தை அளவிட பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. புள்ளிவிவரங்கள் மற்றும் போர்ட்ஃபோலியோக்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தகர்களை கவனமாகத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் கைமுறையாக வர்த்தகம் செய்பவர்களை விட அல்லது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தகர்களைத் தேர்ந்தெடுக்கும் நபர்களைக் காட்டிலும் 10% வெற்றிகரமானவர்கள் என்று முடிவுகள் காட்டுகின்றன. 

நகல் வர்த்தகம் வர்த்தகர்களுக்கு குறைந்த அபாயங்களைக் கொண்ட பரந்த அளவிலான முதலீட்டு விருப்பங்களை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது புதிய முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளைக் கண்டறிய உதவுகிறது மற்றும் அவர்களின் வர்த்தக வாழ்க்கையின் தொடக்கத்தில் மேம்பட்ட தொழில்நுட்ப பகுப்பாய்வைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. இந்த வழியில், நகல் வர்த்தகம் வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது, அதே நேரத்தில் அபாயங்களை குறைந்தபட்சமாக குறைக்கிறது.

Forex ஆரம்பநிலையாளர்கள் அதிக பயனடையலாம் 

அந்நிய செலாவணி வர்த்தகத்தின் ஆரம்ப கட்டம் பொதுவாக சவால்கள் நிறைந்தது மற்றும் சந்தை பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வது நீண்ட நேரம் எடுக்கும். எனவே, நகல் வர்த்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக சந்தையில் நுழைவதற்கும் தொழில் வல்லுநர்கள் தங்கள் நிலைகளைத் திறந்து உத்திகளைப் பயன்படுத்தும்போது அவர்களைக் கண்காணிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மற்றொரு தொழில்முறை பண மேலாளரை நகலெடுப்பது அனுபவத்தைப் பெறவும் ஆபத்தைக் குறைக்கவும் உதவும். 

வர்த்தகம் செய்ய குறைந்த பகுப்பாய்வு திறனே போதும் 

பண மேலாளர்கள் லாப இலக்குகள் மற்றும் வர்த்தக உத்திகளை அமைப்பதில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பதால், ஆரம்பநிலையாளர்கள் சந்தையில் நுழைவதற்காக தொழில்நுட்ப மற்றும் அடிப்படை பகுப்பாய்வு இல்லாமலேயே வர்த்தகம் செய்யலாம். இருப்பினும், உங்களின் முதலீட்டு மதிப்பு மற்றும் அபாயங்களைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள, பகுப்பாய்வில் தேவையான அறிவைப் பெற்றிருப்பது நல்லது. 

எளிதாக வருமானம் ஈட்ட உதவுகிறது 

நிலையான வருமானத்தைப் பெறுவதற்கு அனுபவம் தேவைப்படுவதால் Forex வர்த்தகம் அனைவருக்கும் எடுபடாது என்றாலும், குறைந்தபட்ச அபாயங்களுடன் வருமானத்தைப் பெறுவதற்கு நகல் வர்த்தகம் ஒரு சிறந்த ஆதாரமாகும். Forex சந்தை நிலையற்றது, இதில் நீங்கள் உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே யதார்த்தமான முதலீட்டு இலக்குகளை நிர்ணயிப்பது மற்றும் இழப்புகளுக்கு ஒரு விளிம்பை அனுமதிப்பது முக்கியம்.  

நீங்கள் ஒரு பண மேலாளரை தேர்வு செய்தவுடன், செயல்திறன், குறைந்தபட்ச அபாயங்கள், லாபம் போன்ற பல காரணிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு நிலையான வருமானத்தைப் பெறுவதற்கு, ஒரு நல்ல நிலையான வரலாற்றைக் கொண்ட பண மேலாளரை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. 

நெகிழ்வான மற்றும் குறைந்தபட்ச அர்ப்பணிப்பே போதும் 

வர்த்தகங்கள் அனைத்தும் பண மேலாளர்களால் கையாளப்படுவதால், நகல் வர்த்தகத்திற்கு குறைந்த நேரமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. நகலெடுப்பதை தளம் கையாளும். உங்களுக்கு முழுநேர வேலை இருந்தால், உங்கள் முதலீடுகளை நிர்வகிப்பதற்கான சிறந்த வழி ஒரு தொழில்முறை பண மேலாளரை பணியமர்த்துவதாகும். சந்தை கண்காணிப்புக்கு நிறைய நேரம் ஆகக்கூடும் மற்றும் முதலீட்டாளரின் முழு அர்ப்பணிப்பு தேவைப்படுடும். நகல் வர்த்தகத்தின் நன்மை என்னவென்றால், இதற்கு மிகக் குறைந்த அர்ப்பணிப்பே தேவைப்படுகிறது, மற்றும் இது வர்த்தகம் தொடங்க எளிதானது.

நகல் வர்த்தகத்தின் முக்கிய நன்மை தீமைகள் ஆவண

  1. ஆரம்பநிலையாளர்களுக்கு நல்லது: புதிய வர்த்தகர்கள் வர்த்தக நுட்பங்களையும் உத்திகளையும் கற்றுக்கொள்ள இது உதவும், மற்றும் இது முழுநேர நாள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு நேரம் இல்லாதவர்களுக்கும் சிறந்தது. 
  1. (Demo) டெமோ கணக்குகளில் கிடைக்கும்: AximTrade போன்ற சில தரகு நிறுவனங்கள் டெமோ கணக்குகளை வழங்குகின்றன. டெமோ கணக்குகள் இலவசமானவை மற்றும் பயனுள்ள ஆராய்ச்சி கருவிகளுக்கான அணுகலை வழங்குகிறது. 
  1. புதிய நுட்பங்களை ஆராய்தல்: நகல் வர்த்தகம், வர்த்தகர்கள் எங்கும் கேட்காத புதிய வர்த்தக நுட்பங்கள், யோசனைகள் மற்றும் உத்திகளை ஆராய உதவுகிறது. 
  1. சில நேரங்களில் அபாயகரமானதாக இருக்கலாம்: அனுபவம் வாய்ந்த வர்த்தகரை நீங்கள் நகலெடுத்திருந்தாலும், சில நேரங்களில் உங்கள் பணத்தை இழக்க நேரிடும். முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் நகலெடுக்க விரும்பும் வர்த்தகரை மிகவும் கவனமாக பரிசோதிக்க வேண்டும். 
  1. கட்டணம்: சில தரகர்கள் பண மேலாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கமிஷன் கேட்கலாம், இது சிறிய முதலீடுகளைக் கொண்ட வர்த்தகர்களுக்குப் பொருந்தாது.

நகல் வர்த்தகம் Vs சமூக வர்த்தகம் 

(Social Trading) சமூக வர்த்தகமானது புதிய உத்திகளை உருவாக்க பல்வேறு இணையதளங்கள் மற்றும் சேவைகளின் யோசனைகள் மற்றும் நுண்ணறிவுகளை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது. இது வர்த்தகர்களிடையே வர்த்தக குறிப்புகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் யோசனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. நகல் வர்த்தகம் என்பது முடிவுகளிலிருந்து மட்டுமே லாபம் ஈட்டும் போது வர்த்தகத்தைப் பின்பற்றும் செயல்முறையாகும். நகல் வர்த்தகத்தில் ஈடுபடும் முன், சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பநிலையாளர்கள் பொதுவாக சமூக வர்த்தகத்திற்குச் செல்கின்றனர்.


நகல் வர்த்தகத்தை எவ்வாறு தொடங்குவது?

நகல் வர்த்தகம்

பின்வரும் எளிய படிகள் மூலம் AximTrade உடன் வர்த்தகத்தை எளிதாக நகலெடுக்கலாம்:

  1. ஒரு Forex கணக்கைத் திறந்து, எங்கள் (Demo) டெமோ கணக்கில் விர்ச்சுவல் ஃபண்டுகள் மூலம் ஆபத்து இல்லாத வர்த்தகத்தைத் தொடங்கவும். 
  1. MT4 வர்த்தக தளத்தைப் பதிவிறக்கி, உங்கள் வர்த்தகக் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும். 
  1. உங்கள் (Member Area) உறுப்பினர் பகுதியில் உள்நுழைந்து, (Copy Trade) நகல் வர்த்தக விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 
  1. சுயவிவரங்கள், வர்த்தக வரலாறு, ஆபத்து நிலை மற்றும் லாப விகிதங்களைச் சரிபார்த்த பிறகு, நீங்கள் விரும்பும் உத்தி மற்றும் இலக்குகளின் அடிப்படையில் நீங்கள் பின்பற்ற விரும்பும் வர்த்தகரைத் தேர்ந்தெடுக்கவும். 
  1. வர்த்தக வரலாறு மற்றும் செயல்திறன் பகுப்பாய்வின் அடிப்படையில் பின்பற்றப்பட்ட உத்தியை சிறப்பாகக் கண்டறிய, பண மேலாளரின் சுயவிவரத்தைச் சரிபார்க்கவும். 
  1. பண மேலாளர் பின்பற்றும் உத்தியில் நீங்கள் நம்பிக்கையை உணர்ந்தவுடன், “Connect” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் வர்த்தகத்தை நகலெடுக்கத் தொடங்கலாம். ஆனால் முதலில், நீங்கள் உங்கள் கணக்கில் டெபாசிட்/பரிமாற்றம் செய்ய விரும்பும் முதலீட்டு நிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பின்னர் பண மேலாளரின் தற்போதைய வர்த்தகர்களை நகலெடுக்க “Copy Open Trades” பெட்டியை சரிபார்க்கவும். 
  1. “My Accounts” தாவலில் உங்களின் பண மேலாளரின் கணக்குகளின் செயல்திறனைக் கண்காணிக்கவும். 
  1. முதலீடுகள், லாபங்கள், இருப்பு, பங்கு, கட்டணம் மற்றும் செயல்திறன் விளக்கப்படம் ஆகியவற்றைச் சரிபார்த்து உங்களின் பண மேலாளர் கணக்கை பகுப்பாய்வு செய்யுங்கள். 

AximTrade இயங்குதளத்தில் பின்தொடர சிறந்த பண மேலாளர்களை ஆராயத் தொடங்குங்கள். சில எளிய படிகள் மூலம், நீங்கள் AximTrade உடன் கணக்கை அமைக்கலாம் மற்றும் நிதி சந்தையில் முதலீடு செய்வதற்கான வரம்பற்ற வாய்ப்புகளை ஆராயலாம். AximTrade, 2021 ஆம் ஆண்டில் 4 உலகளாவிய Forex விருது பெற்று, Forex சந்தையில் சிறந்த போட்டித்தன்மையுடன் நகல் வர்த்தகத்திற்கான மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

Forex கணக்கு வகைகள் மற்றும் வர்த்தக நிலைமைகள் பற்றி மேலும் அறிய, AximTrade மதிப்பாய்வைப் படித்து Forex சந்தை மற்றும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளைப் பெறவும்.

aximtrade broker